Posts

59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Image
   59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் பிரதிநிதித்துவப்படம் புதுடெல்லி கரோனா வைரஸ் பரவலால்  குழந்தைகள்  கல்வி கற்கும் சூழல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்-லைன் மூலம் நடந்து வரும் நிலையில், 59.2 சதவீதம்  குழந்தைகள்  ஸ்மார்ட் போன்களை (வாட்ஸ்அப் ,பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட்மூலம்) மெசேஜ் அனுப்பவே பயன்படுத்துகிறார்கள், 10.1 சதவீதம் மட்டுமே கல்வி கற்க பயன்படுத்துகிறார்கள் என்று  தேசிய  குழந்தைகள்  உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால்,  இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37.8 % பேருக்கு ஃபேஸ்புக்கில் கணக்கும், 24.3 சதவீதம் பேருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கும் உள்ளது எனத் தெரியவந்துள்ளது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் கணக்குத் தொடங்க வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணாக இந்தக்  குழந்தைகள்  கணக்கு வைத்துள்ளன. “இன்டர்நெட் இணைப்புடன் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பிற உபகரணங்களை  குழந்தைகள்  பயன்படுத்துவதால்

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் பண்ணைகளில் உஷார்

Image
  கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் பண்ணைகளில் உஷார் 07:58 pm Jul 26, 2021 |  நாமக்கல்: கேரளாவில் கோழிகளை பறவைக்காய்ச்சல் தாக்கியுள்ளதால், நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து வழக்கம்போல கேரளாவுக்கு முட்டை கொண்டு செல்லப்படுகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கடந்த இரு தினங்களுக்கு முன், 300க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென இறந்தன. அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கோழிப்பண்ணைக்கு சென்று, இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதித்தனர். அதில் கோழிகள் பறவை காய்ச்சல் தாக்கியதால் இறந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அரியானா மாநிலத்தில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 வயது சிறுவன் சமீபத்தில் உயிரிழந்தான். தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் கோழிகளை தாக்கியுள்ளதால், நாமக்கல் பண்ணையாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணை

தகுதிப் போட்டியில் இலக்கை எட்டி உலகப்போட்டிக்கு தகுதி பெற்றும் குமரி வீராங்கனைக்கு வாய்ப்பு மறுப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

Image
தகுதிப் போட்டியில் இலக்கை எட்டி உலகப்போட்டிக்கு தகுதி பெற்றும் குமரி வீராங்கனைக்கு வாய்ப்பு மறுப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தாய் கண்ணீர் மல்க கோரிக்கை 05:39 pm Jul 26, 2021    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் வீராங்கனை ஒருவர் காது கேளாதோருக்கான உலக தடகள ஷாம்பியன் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றும் செல்ல முடியாத நிலையில் தவிக்கிறார். ஆகிய இந்திய காது கேளாதோர் அலட்சியமே இதற்கு காரணம் என்று புகார் கூறியுள்ள வீராங்கனையின் தாயார் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு பகுதியை சேர்ந்த ஏழை தம்பதியின் மகள் சமீஹா பர்வீன். இவருக்கு வயது 17. விளையாட்டில் எதையும் சாதிக்கும் ஆர்வம். இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தார். இருப்பினும் விளையாட்டு ஆர்வம் குறையாத அவர்; பல்வேறு தடகள போட்டிகளில் பிரகாசிக்க தொடங்கினார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றதுடன் தேசிய காது தேளாதோர் தடகள

வடசென்னை பேச்சு வழக்கு பேசுரதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம் – சார்பட்டா பட நாயகி துஷாராவின் உருக்கமான பதிவு.

Image
  வடசென்னை பேச்சு வழக்கு பேசுரதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம் – சார்பட்டா பட நாயகி துஷாராவின் உருக்கமான பதிவு. By   Rajkumar -   July 26, 2021 0 2508 ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. உருவாகியுள்ளது. இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர்.இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்த

79வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!!

Image
  79வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!! 09:50 am Jul 25, 2021 |  டெல்லி: மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடியின் 79-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைந்தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் படம்: இளைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு

Image
  பைந்தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் படம்: இளைஞருக்கு முதலமைச்சர் பாராட்டு 09:39 am Jul 25, 2021 |  காஞ்சிபுரம்: பொன்னேரி கரை தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது இளைய மகன் கணேஷ் (25), சிவில் டிப்ளமா படித்துவிட்டு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கணேஷ், தனது நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு ஓவியம் வரைந்து கொடுப்பார். இந்நிலையில் ஓவியத்தின் மீது உள்ள தனியாத தாகத்தால் பணி முடிந்து ஓய்வு நேரங்களில் தொடர்ந்து சார்கோல் ஆர்டிஸ்ட் எனும் பென்சில் வரைவு ஓவியங்களை வரைந்து வந்தார். இதையொட்டி சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், புத்தர் போன்றோரின் ஓவியங்களை தத்ரூபமாகவும், கலைநயமிக்கமாகவும் வரைந்து அசத்தியுள்ளார். இதுபோல் அவர் வரையும் ஓவியங்களை, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார். இந்நிலையில் கணேஷ், தமிழ் எழுத்துக்கள் 247, தமிழ் வட்டெழுத்துக்கள், தமிழி எழுத்து

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்துக்கு தீவிர சிகிச்சை... உடன் பயணித்த தோழி மரணம்!

Image
கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்துக்கு தீவிர சிகிச்சை... உடன் பயணித்த தோழி மரணம்! மை.பாரதிராஜா யாஷிகா ஆனந்த் ''யாஷிகாவின் நிலை கிரிட்டிக்கலாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.''   பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த தோழி மரணம் அடைந்த நிலையில் யாஷிகா ஆனந்த்தும் ‘critical care’ -ல் திவீர சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த்தின் மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக யாஷிகா ஆனந்தின் தந்தையிடம் தொடர்பு கொண்டு பேசினோம். ”நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன்