Posts

Showing posts from May, 2021

கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பிய பெண் கற்பழிப்பு

Image
  கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பிய பெண் கற்பழிப்பு பதிவு: ஜூன் 01, 2021 11:16 IST கோப்புப்படம் கொரோனாவில் குணமடைந்த பெண் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வீட்டிற்கு நடந்து சென்ற போது கற்பழிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் சாரைடியோ மாவட்டத்தில் 40 வயது பெண்மணி ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், தனது மகளுடன் தானாக வீட்டிற்கு புறப்பட்டார். ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களும் கிடைக்கவில்லை. அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அவர்களது வீடு இருந்தது. நடந்துசென்றபடி வீடுநோக்கி சென்று கொண்டிருந்தனர். கடந்த 27-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் நடந்து வந்தபோது 2 ஆண்கள் அவர்களை வழிமறித்தனர். அவரை தூக்கிச் சென்று தேயிலை தோட்டத்திற்குள் வைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். அவரது மகள், ஓடி தப்பித்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் 2 பேரையும் கைது செய்தனர். கொர

பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர்கள் முடிவு

Image
  பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர்கள் முடிவு புதுடெல்லி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்,  அலோபதி மருத்துவம்  முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராம்தேவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். எனினும் உத்தராகண்ட் மாநில  இந்திய மருத்துவக் கவுன்சில்  (ஐஎம்ஏ), ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ம் தேதி (இன்று) கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர் சங்க கூட்டமைப்பு (எப்ஓஆர்டிஏ) முடிவு செய்துள்ளது. டாக்டர்கள் குறித்தும்,  அலோபதி மருத்துவம்  குறித்து ஒழுங்கீனமான வகையில் கருத்து தெரிவித்த ராம்தேவைக் கண்டித்து ஜூன் 1-ம் தேதி கருப்பு தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினத்தில் நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை நடைபெறும். அவர் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மருத்துவ சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்

கேரளாவில் திருமண அழைப்பிதழ் இருந்தால் ஜவுளி, நகை கடைகளில் நுழைய அனுமதி - பினராயி விஜயன் அறிவிப்பு

Image
  கேரளாவில் திருமண அழைப்பிதழ் இருந்தால் ஜவுளி, நகை கடைகளில் நுழைய அனுமதி - பினராயி விஜயன் அறிவிப்பு திருவனந்தபுரம், கேரளாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களை விட சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 12,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரம் ஆகும். அதே போல் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் விகிதம் படிப்படியாக குறைந்து நேற்றைய தினம் 13 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கொரோனா குறித்தான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்-மந்திரி நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளாவில் இன்று முதல் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் பொது இடங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து நடை பயிற்சி செல்லலாம். ஸ்டேசனரி கடைகள் திறக்க அனுமதி இல்ல

வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல்

Image
  வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் பதிவு: ஜூன் 01, 2021 09:13 IST நளினி, முருகன் வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளதால் அவர்களுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள நளினியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உடனிருந்து கவனிக்கவும், முருகனின் தந்தை கடந்த ஆண்டு இறந்ததால் இறுதி சடங்குகள் செய்யவும் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு மனு அளித்துள்ளனர். இருவரின் மனுக்களும் பரிசீலனையில் இருப்பதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இருவரும் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்க உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளதால், அந்த இடத்தின் பாதுகாப்பு மற்றும் வசதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிறைத்துறை, மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போ

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 7 ஆண்டுகளில் ‘நாடு பெருமைமிக்க தருணங்களை அனுபவித்தது’ - மோடி பெருமிதம்

Image
  மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 7 ஆண்டுகளில் ‘நாடு பெருமைமிக்க தருணங்களை அனுபவித்தது’ - மோடி பெருமிதம் பதிவு: மே 31, 2021 07:30 IST பிரதமர் மோடி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பதவி ஏற்றது. தற்போது 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் முடிந்த நிலையில், நாடு பெருமைமிக்க தருணங்களை அனுபவித்ததாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பதவி ஏற்றது. தற்போது 7 ஆண்டுகள் முடிந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார். அது வருமாறு:- இன்று (நேற்று) மே 30-ந் தேதி, நாம் மனதின் குரல் நிகழ்ச்சியில் இருக்கிறோம். இது தற்செயலாக நமது அரசு பதவிக்கு வந்து 7 ஆண்டுகள் முடிந்துள்ளதை குறிக்கிறது. இந்த 7 ஆண்டுகளில் நாங்கள் ‘எல்லோருடைய வளர்ச்சியும், எல்லோருடைய நம்பிக்கையும்’ என்பதை தாரக மந்திரமாக பின்பற்றிவருகிறோம். நாம் அனைவரும் ஒவ்வொரு கணமும், நாட்டின் சேவையில் அர்ப்பணிப்புடன் சே

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் எங்களது முதல் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Image
  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் எங்களது முதல் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி 07:25 am May 31, 2021 |  கோவை: ‘‘தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது முதல் நோக்கம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பார்வையிட்டேன். மருத்துவர்களைபோல் பி.பி.இ. கிட் உடுப்பு அணிந்து, நோயாளிகளை நேரில் பார்த்தேன். அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து உரையாடினேன். பி.பி.இ. கிட் உடையை போடுவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். பல மணி நேரம் அந்த உடையை அணிந்துகொண்டு மருத்துவர்களும், செவிலியர்களும் பணிபுரிவது பாராட்டுதலுக்குரியது. அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில், நானும் அந்த உடையை அணிந்து, ஆய்வு மேற்கொண்டேன். கொரோனா பரவலை தடுப்பது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது ஆகியவைதான் முக்கிய குறிக்கோள். இதற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த அரசு செயல்படுகிறது. கர்நாடக மாநிலத்தை

நாளை உலக பால் தினம்: பால்வளத் துறை மேம்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு- நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தகவல்

Image
  நாளை உலக பால் தினம்: பால்வளத் துறை மேம்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு- நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தகவல் சென்னை தமிழ்நாடு, புதுச்சேரியின் பால்வளத் துறை மேம்பாட்டுக்கு நபார்டுவங்கி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து நபார்டு வங்கியின்மண்டல தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச அளவில் பால்வளத் துறையின் மேம்பாட்டுக்காக 2001-ம் ஆண்டு முதல் ஜூன் 1-ம் தேதியை உலக பால் தினமாக கொண்டாடி வருகிறது. பால்பண்ணைத் தொழிலில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கால்நடை வளர்ப்பு பற்றியஆராய்ச்சிக்கான நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக சேலம் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் தொடர்பான ஒருங்கிணைந்த உயர்நிலை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவுவதற்கு  நபார்டு வங்கி  ரூ.416 கோடிநிதியுதவி வழங்கியுள்ளது. பால்வளத் துறையை மேம்படுத்த 50 பால் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி, ரூ.4.87 கோடிநிதியுதவி வழங்கியுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால்உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) மூலம், 29 திட்டங்களுக்காக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்

மே மாத மின் கட்டணத்தை கணக்கிடுவது எப்படி?- இணையதளத்தில் மின் வாரியம் விளக்கம்

Image
  மே மாத மின் கட்டணத்தை கணக்கிடுவது எப்படி?- இணையதளத்தில் மின் வாரியம் விளக்கம் சென்னை கரோனா ஊரடங்கால் இம்மாத மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற விளக்கம், மின் வாரியஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக,மின் வாரிய ஊழியர்கள், மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்வதை தவிர்க்கின்றனர். எனவே, நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து, வாட்ஸ்அப் மூலம் மின் வாரிய செயற்பொறியாளருக்கு அனுப்பிவைத்தால், அவர்கள் மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்து, அதற்குரிய கட்டணத்தை தெரிவிப்பார்கள். பிறகு மின் கட்டணத்தை செலுத்தலாம். அல்லது 2019-ம் ஆண்டு மே மாத கட்டணத்தை உத்தேசமாக செலுத்தலாம். அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கருதினால், கடந்த மார்ச் மாத கட்டணத்தை செலுத்தலாம். அந்த கட்டணம் வரும் ஜுலை மாதம் செலுத்தப்படும் மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக நுகர்வோரிடம் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாத மின் கட்டணம் எப்படி கணக்கிடப்பட்டு, வரும் ஜுலை மாதத்தில் எவ்வாறு முறைப்படுத்தப்படும் என்பது