59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
59% குழந்தைகளுக்கு மெசேஜ் அனுப்ப மட்டும் பயன்படும் ஸ்மார்ட்போன்; 10% மட்டுமே கல்வி கற்கிறார்கள்: என்சிபிசிஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் பிரதிநிதித்துவப்படம் புதுடெல்லி கரோனா வைரஸ் பரவலால் குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்-லைன் மூலம் நடந்து வரும் நிலையில், 59.2 சதவீதம் குழந்தைகள் ஸ்மார்ட் போன்களை (வாட்ஸ்அப் ,பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட்மூலம்) மெசேஜ் அனுப்பவே பயன்படுத்துகிறார்கள், 10.1 சதவீதம் மட்டுமே கல்வி கற்க பயன்படுத்துகிறார்கள் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37.8 % பேருக்கு ஃபேஸ்புக்கில் கணக்கும், 24.3 சதவீதம் பேருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கும் உள்ளது எனத் தெரியவந்துள்ளது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் கணக்குத் தொடங்க வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணாக இந்தக் குழந்தைகள் கணக்கு வைத்துள்ளன. “இன்டர்நெட் இணைப்புடன் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பிற உபகரணங்களை குழந்தைகள் பயன்படுத்துவதால்