பி.வி.சிந்து : சில்வர் சிந்து தங்கம் வெல்வரா... முதல் சுற்றில் அதிரடி அட்டகாச வெற்றி!
உலகின் நம்பர் 1 வீரராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் மெஸ்ஸிக்கே தன்னுடைய நாட்டிற்கு ஒரு கோப்பையை வென்று கொடுக்க 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சில்வர் சிந்து விமர்சனங்களுக்கு செவி கொடுக்காமல் தன்னுடைய இலக்கை நோக்கி மட்டுமே முன்னேறிக்கொண்டிருந்தார். சிறுமியாக இருக்கும்போது சிந்துவிடமிருந்த அதே உற்சாகத்தோடு!
விளைவு, 2018 காமென்வெல்த் போட்டியில் தங்கம், 2019 பாசெல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் என சில்வர் சிந்து தங்கமகளாக ஜொலிக்க தொடங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக சிந்துவின் மீதிருந்த நம்பிக்கை இன்னும் பல மடங்கு உயர்ந்தது.
சமீபத்தில் சிந்துவுடைய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் டோக்கியோவில் அவருடைய அனுபவம் அவருக்கு கைக்கொடுக்கும். மேலும், கடந்த முறை சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்ற கரோலினா மரின் இந்த முறை காயம் காரணமாக ஒலிம்பிக்கிற்கு வரவில்லை. இதெல்லாம் சிந்துவிற்கான சாதகமான அம்சமாக இருக்கிறது. அதற்கேற்ப டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் சுற்றில் இஸ்ரேலிய வீரங்கனை Ksenia Polikarpova-வை 21-7, 21-10 என நேர்செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சிந்து.
ஒரு சாமானிய இந்தியர் சிந்துவிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். ஆகஸ்ட் 19, 2016 இரவு நேர காட்சிகள் மீண்டும் அரங்கேற வேண்டும். தெருக்கள் நிசப்தமாக… குடும்பம் குடும்பமாக வரவேற்பறையில் கூட….செய்வீர்களா சிந்து?
Comments
Post a Comment