எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல்
எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல் ஏ.ஆர். ரகுமான் பதிவிட்ட தனது மகளின் திருமண புகைப்படம். மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது, ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றியவர் இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் மகளின் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் 1995-ல் சாய்ரா பானுவை திருமணம் முடித்தார். இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் மூத்த மகள் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்