IRCTC: இனி ரயிலில் தட்கல் முன்பதிவு ரொம்ப ஈஸி… வந்தாச்சு வேலட் வசதி
IRCTC: இனி ரயிலில் தட்கல் முன்பதிவு ரொம்ப ஈஸி… வந்தாச்சு வேலட் வசதி
TATKAL BOOKING through IRCTC e-Wallet: இனி தட்கல் டிக்கெட்டை ஈஸியாக புக் செய்துவிடலாம். IRCTC வேலட் மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
ஆனால், அவசரமாக ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், முன்பதிவு செய்யாவிட்டால் ரயிலில் தட்கல் டிக்கெட்டை புக் செய்திட காத்திருப்பார்கள். தட்கல் டிக்கெட்டுகள் ரயிலின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பதிவு செய்யலாம். இருப்பினும், தட்கல் டிக்கெட்டை ஒரே நேரத்தில் புக் செய்ய மக்கள் முயற்சிக்கையில், பேமெண்ட் பேஜில் பல நேரங்களில் Error வந்துவிடும். மீண்டும் டிக்கெட் புக்கிங் பிராசஸ் செய்து போனால், டிக்கெட் காலியாகிவிடும். அதனை தீர்த்திட, ஐஆர்சிடிசி புதிதாக வேலட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் IRCTC கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து டிக்கெட்டுகளை மிக எளிதாக முன்பதிவு செய்யலாம்
eWallet பாதுகாப்பாகவும், மிக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது. பணம் செலுத்தும் போது OTP பெறுவதில் தாமதம் ஏற்படுதக் போன்ற சிக்கல்கள் நேரும் சமயத்தில், இது உங்களுக்கு பெரிதும் உதவும்.
ஐஆர்சிடிசி இ வேலட் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?
- முதலில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு ஐஆர்சிடிசி கணக்கை லாகின் செய்ய வேண்டும்.
- அதில், Plan My Journey பேஜ்ஜில் IRCTC e-Wallet category செல்ல வேண்டும்.
- அதில், “IRCTC eWallet Registration” கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து, பான் அல்லது ஆதார் போன்ற விவரங்களை பதிவட வேண்டும்.
- இதையடுத்து, இ வேலட் ரெஜிஸ்டர் செய்திட, முதல்முறை மட்டும் 50 ரூபாய்க்கு ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
- பின்னர், ஐஆர்சிடிசி வேலட்டில் குறைந்தப்பட்சமாக 100 ரூபாய் டெப்பாசிட் செய்துகொள்ளலாம்.
- இறுதியாக, கணக்கின் பாஸ்வேர்டு பதிவிட்டு, go கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் டிக்கெட் புக் செய்கையில், வேலட் ஆப்ஷனும் பேமெண்ட் பேஜ்ஜில் இடம்பெற்றிருக்கும். அதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கும் என்பதை, இடது பாரில் இருக்கும் டெப்பாசிட் ஹிஸ்திரியில் செக் செய்து கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி வேலட்டில் பணம் டெப்பாசிட் செய்வது எப்படி?
- முதலில், ஐஆர்சிடிசி இ வேலட் கணக்கில் லாகின் செய்ய வேண்டும்.
- e-Wallet account பிரிவின் கீழ் “Deposit IRCTC e-Wallet” கிளிக் செய்ய வேண்டும்.
- டெப்பாசிட் செய்ய விரும்பும் தொகையை பதிவிட வேண்டும்.
- பேமெண்ட் ஆப்ஷன் செலக்ட் செய்ய வேண்டும்.
- அவ்வளவு தான், டெப்பாசிட் செய்த பணம், வேலட்டிற்கு மாற்றப்பட்டுவிடும்
Comments
Post a Comment