இனி கஷ்டம்.. திமுக சும்மா விடாது.. தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுக்கிறாரா சசிகலா?
Follow இனி கஷ்டம்.. திமுக சும்மா விடாது.. தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுக்கிறாரா சசிகலா? By Anbarasan Gnanamani சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்காதது தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற சந்தேகத்திற்கு வலுவூட்டும் வகையில் அமைகிறது முக்கிய தலைகளின் சமீபத்திய கருத்துகள். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா, மீண்டும் அரசியலில் களமிறங்கி அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்று 'அறிவாலயம்' கூட எண்ணியது. சசிகலாவுடன் இணையுங்கள் என்று சென்னையில் தங்கியிருந்து அமித் ஷா தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தும் முதல்வர் அசைந்து கொடுக்கவில்லை. ஓ.பி.எஸ். சசிகலாவை மீண்டும் இணைக்க ஆர்வம் காட்டினாலும், முதல்வரின் 'விடாப்பிடி' இணைப்பை சாத்தியமற்றதாக்கியது. அதோடு நிற்காமல், சசிகலாவை அரசியலில் இருந்தே ஒதுங்கும் நிலைக்கு கொண்டுச் சென்றது. பிறகு, 'அரசியலில் இருந்து விலகி நிற்கிறேன்' என்ற அறிக்கையை கொடுத்துவிட்டு, சசிகலா தற்போது கோயில் குளமாக சுற்றி மனதை அமைதிப்படுத்திக் கொண்டிருக்க, கள நிலவரங்கள் சசிகலா இல்லாததன் குறையை வெளிப்படுத்துவது அமைச்சர்களின் கருத்துக்கள் மூலம் அப்பட்டமாக தெரி