இனி கஷ்டம்.. திமுக சும்மா விடாது.. தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுக்கிறாரா சசிகலா?


இனி கஷ்டம்.. திமுக சும்மா விடாது.. தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுக்கிறாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்காதது தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற சந்தேகத்திற்கு வலுவூட்டும் வகையில் அமைகிறது முக்கிய தலைகளின் சமீபத்திய கருத்துகள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா, மீண்டும் அரசியலில் களமிறங்கி அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்று 'அறிவாலயம்' கூட எண்ணியது. சசிகலாவுடன் இணையுங்கள் என்று சென்னையில் தங்கியிருந்து அமித் ஷா தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தும் முதல்வர் அசைந்து கொடுக்கவில்லை.

ஓ.பி.எஸ். சசிகலாவை மீண்டும் இணைக்க ஆர்வம் காட்டினாலும், முதல்வரின் 'விடாப்பிடி' இணைப்பை சாத்தியமற்றதாக்கியது. அதோடு நிற்காமல், சசிகலாவை அரசியலில் இருந்தே ஒதுங்கும் நிலைக்கு கொண்டுச் சென்றது. பிறகு, 'அரசியலில் இருந்து விலகி நிற்கிறேன்' என்ற அறிக்கையை கொடுத்துவிட்டு, சசிகலா தற்போது கோயில் குளமாக சுற்றி மனதை அமைதிப்படுத்திக் கொண்டிருக்க, கள நிலவரங்கள் சசிகலா இல்லாததன் குறையை வெளிப்படுத்துவது அமைச்சர்களின் கருத்துக்கள் மூலம் அப்பட்டமாக தெரிகிறது.

 அந்த '3' விஷயங்கள்

சசிகலா புறக்கணிப்பு

குறிப்பாக தென் மாவட்டங்களில், மூன்று விஷயங்களில் அதிமுக மீதும் ஓ.பி.எஸ் மீதும் பல தொகுதிகளில் வசிக்கும் முக்குலத்தோர் மக்கள் கோபம் கலந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பிரதானமான முதல் விஷயம், 'சசிகலா புறக்கணிப்பு'. அதிமுக மீண்டும் சசிகலாவை ஏற்கவில்லை என்ற அதிருப்தி அதிக அளவில் உள்ளது. இரண்டாவது, ஓ.பி.எஸ் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்காமல், கொங்கு வேளாளர் பக்கம் ஆட்சியை கொடுத்தது. மூன்றாவது, வன்னியர்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் இ.பி.எஸ் ஆர்வம் காட்டியது. இவை அனைத்தும், ஓ.பி.எஸ் மீது அதிருப்தியாக திரும்பியுள்ளன.

 கள நிலவரம்

நிலைமை சரியில்லை

அதன் வெளிப்பாடு தேர்தல் களத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக எதிரொலிப்பதால் தான், 'அதிமுகவை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை மீண்டும் ஏற்றுக்கொள்வதை பரிசீலிக்கலாம்' என்று ஓ.பி.எஸ் கூறியதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த தேர்தலில் கிட்டத்தட்ட முக்குலத்தோர் சமூகம் சார்ந்த 33 வேட்பாளர்களை ஓ.பி.எஸ் நிறுத்தியுள்ளார். ஆனால், இதில் பெரும்பாலான இடங்களில் நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த பிறகே சசிகலா இணைப்பு குறித்து மீண்டும் ஓ.பி.எஸ் பேசியிருக்கிறார் என்கின்றனர்.

 டிடிவி தளபதி

பெரும் சிக்கல்

இதே நிலைமை தான் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜுவுக்கும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தேவர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாகி முதன்மையிடத்திற்கு வந்தது மட்டுமின்றி, அங்கு தேவர் சமூகத்தில் அறியப்பட்ட முக்கிய புள்ளியான கடம்பூர் மாணிக்கராஜா, ஜெ. மறைவுக்குப் பின் அ.ம.மு.க.விற்கு மாறி, தற்போது டிடிவிக்கு 'தளபதி'யாய் முன்னின்று கோவில்பட்டியில் வேலை செய்து வருகிறார். இவை அனைத்தும் அமைச்சரும், கோவில்பட்டி வேட்பாளருமான கடம்பூர் ராஜுவுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

 சந்தேகம் இல்லை

இயற்கை மரணம்

இந்த நிலையில் தான் அவர், 'ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் சந்தேகப்படவில்லை. ஜெயலலிதா உடல்நிலை குறைவு ஏற்பட்டு இயற்கையாகவே உயிரிழந்தார். விமர்சனங்கள் வந்ததால் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா உடனிருந்து கவனித்துக் கொண்டார். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதால் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார்' என்று சசிகலா தேவையை கடம்பூர் ராஜு உணர்ந்து பேசியிருக்கிறார் என்கின்றனர்.

அவர்களே வருவார்கள்

ஆனால், தேர்தலுக்கு முன்பு சசிகலா - அதிமுக இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்றே தெரிய வருகிறது. தேர்தல் முடிவைப் பொறுத்து, அவர்களே என்னைத் தேடி வருவார்கள் என்று சசிகலா காத்திருப்பதாக கூறுகின்றனர். '1989ல் இதேபோன்ற நிலைமையை ஏற்கனவே பார்த்தவள் நான். இந்த இழுபறி எங்கே போய் முடியும் என்று எனக்கு தெரியும். அவர்களே வருவார்கள்' 

 சிக்ஸர் அடித்த முதல்வர்

Safe Zone

ஒட்டுமொத்தமாக, இந்த இடியாப்ப சிக்கலில் ஸ்கோர் அடித்திருப்பது முதல்வர் பழனிசாமி தான் என்றும் கூறுகின்றனர். மக்களுக்கு அவர் மீது பெரிதாக எந்த விமர்சனமும் இல்லை. முக்குலத்தோர் வாக்குகளை டீலில் விட்டாலும், வன்னியர்கள் வாக்குகளையும், கவுண்டர்களின் வாக்குகளும் தனக்கு பக்க பலமாக இருக்கும்படி கணக்கு போட்டு அனைத்தையும் கச்சிதமாக செயல்படுத்தி இருக்கிறார். முத்தரையர்கள் எதிர்ப்பு இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு இல்லை என்று எண்ணுகிறார். ஆகையால், முதல்வர் பழனிசாமியைப் பொறுத்தளவில் Safe Zone-ல் இருக்கிறார். பெரும் சிக்கலில் இருப்பது, கட்சியில் தன்னை தனிப்பெரும் ஆளுமையாக உருவாக்க முற்படும் ஓ.பி.எஸ் தான் என்றும் கூறுகின்றனர்

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!