Posts

கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு - சோனியா காந்திக்கு கடிதம்

Image
  கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு - சோனியா காந்திக்கு கடிதம் கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு செய்துள்ளார். பதிவு: மே 30,  2021 08:13  AM திருவனந்தபுரம், கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதவி விலக முடிவு செய்துள்ளார். கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தேர்தல் தொடர்பாக விரிவான கடிதம் எழுதியுள்ள அவர், அதில் தான் மேலும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்பதையும் குறிப்பிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அந்த பதவியில் தொடருமாறு கட்சித்தலைமை அவரை கேட்டுக்கொண்டு உள்ளது. இதை நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘மாநில காங்கிரஸ் தலைமைக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை மட்டுமே இந்த பதவியில் தொடர்வேன். மாநில காங்கிரஸ் தலைவராக எனக்கு கட்சித்தலைவர்

நாடு முழுவதும் 11,700 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

Image
  நாடு முழுவதும் 11,700 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு பதிவு: மே 30, 2021 13:10 IST கோப்புபடம் கருப்பு பூஞ்சை நோயை அனைத்து மாநில அரசுகளும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. அவற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ‘மியூகோமைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த நோயாளிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பை கொண்டவர்கள் மத்தியில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த பாதிப்பு வருவதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நோயை அனைத்து மாநில அரசுகளும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த

ராஜகோபாலன் சார் மீது நடவடிக்கை எடுக்காதீங்க, அந்த பசங்க என்ன குழந்தையா – வக்காலத்து வாங்கிய BJP பிரபலம். கிழிததெடுத்த ஜூலி.

Image
  TAGS julie PSBB Psbb School ஜூல Previous article யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமனுக்கு இனி ஜெயிலில் தான் சாப்பாட்டு – காரணம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தான். Next article தமிழ் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா? RELATED ARTICLES 5 வருஷமா அதிமுக ஆட்சின்னு சும்மா இருந்தீங்கள – தனது தோழி பிரச்சனை குறித்து... May 30, 2021 இத்தனை வருஷம் காதலித்தேன், ஆனா இப்போ நான் சிங்கிள் இல்ல – லட்சுமி மேனன் May 30, 2021 ஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் தங்கையாக நடிக்க மறுத்துள்ள ஷாலினி ? காரணம் இதான்.... May 30, 2021 -விளம்பரம்- ABOUT US #1 Tamil Cinema News Portal Our Network Dheivegam Cric Tamil Contact us:  hi@bioscope.in FOLLOW US       © behindtalkies.com i COMMERCIAL BREAK x

திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்

Image
  திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி காலமானார்    Web Team  Published : 29,May 2021 07:39 PM முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக் குறைவால் காலமானார் புற்றுநோய்க்காக சென்னை ரேலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு 7.05 மணிக்கு உயிர் பிரிந்தது. சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரியின் உயிர் பிரிந்ததாக சென்னை ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய்க்காக 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த பரமேஸ்வரிக்கு பெரம்பலூரில் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கருப்பு பூஞ்சை நோய் ஆராய்ச்சிக்கு வல்லுனர் குழு நியமனம்- தமிழக அரசு உத்தரவு

Image
  கருப்பு பூஞ்சை நோய் ஆராய்ச்சிக்கு வல்லுனர் குழு நியமனம்- தமிழக அரசு உத்தரவு பதிவு: மே 29, 2021 09:47 IST தமிழக அரசு கருப்பு பூஞ்சை நோய் ஆராய்ச்சிக்கு வல்லுனர் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மியூகோமைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய், தொற்றை ஏற்படுத்தும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோயை தடுப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கவும், அதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு அரசுக்கு தகவல்களை புதுப்பிக்கவும் மருத்துவ வல்லுனர்களை கொண்ட பணிக்குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக மருத்துவ கல்வி இயக்குனர் செயல்படுவார். சென்னை கண், மூக்கு, தொண்டை (இ.என்.டி.) ஆராய்ச்சி அறக்கட்டளையின் டாக்டர் மோகன் காமேஷ்வர், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் பாபு மனோகர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்புமருந்துகள் இயக்குனர், சென்னை மருத்துவக் கல்லூரி இ.என்.டி. துறைத் தலைவர், மைக்ரோபயாலஜி துறைத் தல

ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள்- அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது

Image
  ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள்- அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது பதிவு: மே 29, 2021 09:43 IST ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ. கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ. கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன. கோவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன்,

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.37 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம்

Image
  உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.37 லட்சம் பேர் பலி... இந்தியாவில் தொடரும் மரண ஓலம் 09:41 am May 29, 2021 | ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.19 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.01 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 170,123,482 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 151,951,604 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 37 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 14,634,381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுப