ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு! என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே மைசூர் சாண்டல் சோப் தமிழகத்தில் மிகப்பிரபலமானது. அப்போ சோப் பெயர் எனக்கு வாயில் வராது என்பதால், "மணக்கும் சோப்" தான் வேண்டுமென அடம் பிடிப்பேன். இன்னைக்கும் எங்க வீட்டில் மைசூர் சாண்டல் சோப் வாசம் ஒவ்வொருவரது மேனியிலும் வீசும். ஆரம்ப காலத்திலிருந்து மைசூர் சாண்டல் சோப் மட்டுமே போட்டு குளித்து வந்தவர்கள், சும்மா அருகில் வந்தாலே சந்தன மணம் வீசும். நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், டெஸ்ட் பண்ணி கூட பாருங்க. தப்பே இல்ல. எப்போதுமே இனிமையான உணர்வை கொடுக்க கூடிய இந்திய தயாரிப்பாகும். சும்மா ஒரு சோப் என்ற அளவோடு நம்முடைய பார்வையை நிறுத்திக்கொள்கிறோம். ஆனால் முதல் உலகப்போர் காலத்தில் தொடங்கி, இன்று வரை பல சவால்களை கடந்து மைசூர் சாண்டல் சோப் மார்கெட்டில் நிலைத்திருக்கும் வரலாறு பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், Anubha Upadhya என்ற பெண், ட்விட்டரில் மைசூர் சாண...
Comments
Post a Comment