பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் நடிகராக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.
Vanitha Vijayakumar: ஹரிநாடாருக்கு ஜோடியாக நடிக்கும் வனிதா விஜயகுமார்

ஹரி நாடார் | வனிதா விஜயகுமார்
- News18 Tamil
- Last Updated:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனிடையே தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
அந்த சேனலை தொடங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். அதைத்தொடர்ந்து தனது குழந்தைகளைக் கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்பும் அமைந்தது. ஆதம் தாசன் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது ஹரி நாடாருக்கு ஜோடியாக '2K அழகானது ஒரு காதல்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முத்தமிழ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் இன்று தொடங்கியது. தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், “கொரோனாவுக்குப் பின் படங்கள் ஆரம்பிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரையுலகின் ஜாம்பவான் ஆர்.பி.சவுத்ரியை நீண்ட வருடத்துக்குப் பின் சந்தித்தது என் அப்பா, அம்மாவை பார்த்தது போல் இருக்கிறது.
Advertisement

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த கதைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு நடிக்கிறேன். இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதம் அருமையாக இருந்தது.
கிராமத்தில் இருக்கக்கூடிய சின்னச் சின்ன விஷயங்கள், காதல் சம்பந்தப்பட்ட அதாவது ஒரு பருவத்தில் ஆரம்பித்து ஒரு பருவம் வரையிலான அதன் பயணம் பற்றிய மிகவும் அழகான கதை இது. அதில் நான் ஒரு முக்கிய கேரக்டரில் ஹரி நாடார் உடன் நடிக்கிறேன். ஹரிநாடார் எனது தூரத்து சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிந்தது” என்றார்.
Comments
Post a Comment