வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் எதிரொலி அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி வீட்டில் ரூ.9 கோடி பறிமுதல்

 

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் எதிரொலி அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி வீட்டில் ரூ.9 கோடி பறிமுதல்

* பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் சிக்கின
* ஐ.டி தீவிர விசாரணைசென்னை: தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின், சம்பந்தி டிஎன்சி இளங்கோவனுக்கு சொந்தமான நிறுவனங்கள், பள்ளிகள், வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், நிறுவனம் மற்றும் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.9 கோடி ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனைகளை நடத்தி பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.  


இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனுக்கு சொந்தமான நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக  டிஎன்சி இளங்கோவன் நடத்தி வரும் சென்னை தி.நகரில் இயங்கி வரும் டி.என்.சி சிட் பன்ட் நிறுவனம், பள்ளிகள், வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்தது. இதில் தி.நகரில் உள்ள டி.என்.சி.சிட் பன்ட் நிறுவனத்தில் மட்டும் கணக்கில் வராத ₹6 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2வது நாளாக டிஎன்சி இளங்கோவனுக்கு சொந்தமான தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சேலம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, தொழில்நிறுவனங்கள், வீடு, அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையிலும் டிஎன்சி.

இளங்கோவன் வீட்டில் இருந்து ரூ.3 கோடி ரொக்க பணம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ₹9 கோடி ரொக்க பணம் அமைச்சர் போட்டியிடும் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கான வருவாய் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து டிஎன்சி இளங்கோவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தி வரும் டிஎன்சி இளங்கோவன், தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள்  சங்கத்தின் முக்கிய பொறுப்பாளராகவும், தனியார் பள்ளி கூட்டமைப்பு  மாநிலசெயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வட்டச் செயலாளர் வீட்டில் ரெய்டு: முன்னாள் சென்னை மாநகராட்சி கவுன்சிலரும் அதிமுக ஆயிரம் விளக்கு பகுதி 117வது வட்ட செயலாளராக உள்ள சின்னையன் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

* முதல் நாள் நடந்த ஐடி சோதனையில் ரூ.6 கோடி சிக்கியது.
* திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்தில் இளங்கோவன்  முக்கிய பொறுப்பில் உள்ளார்.


Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!