பயணிகளுக்கு இலவச மரக்கன்று: கோவை பஸ் கண்டக்டருக்கு பிரதமர் பாராட்டு

 

பயணிகளுக்கு இலவச மரக்கன்று: கோவை பஸ் கண்டக்டருக்கு பிரதமர் பாராட்டு

புதுடில்லி: கோவையில், பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுடன் இலவசமாக மரக்கன்று வழங்கும் கோவையை சேர்ந்த பஸ் கண்டக்டருக்கு, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‛மன் கி பாத்' நேயர்கள் அனைவருக்கும் நான் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். ஏனென்றால், நீங்கள் என்னுடன் பயணிக்கவில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. ‛மன் கி பாத்' நிகழ்ச்சியை வெற்றி அடைய செய்தமைக்கும் இதோடு இணைந்திருக்கும் இன்றைய 75வது நிகழ்ச்சியின் ஒவ்வொரு நேயருக்கும் நான் எனது மனப்பூர்வமான நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

நமது நாடு, விடுதுலை அடைந்து 75வது ஆண்டினை துவங்கியிருக்கிறது. இதனை அம்ருத் மஹோத்சவம் என்ற பெயரில் கொண்டாடுகிறோம். அம்ருத் மஹோத்சவம், தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட நாள் அன்று துவங்கப்பட்டது. இது 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடக்கும். இதனுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் குறித்த படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மூத்த குடிமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தேசத்தின் மூலைமுடுக்கு எங்கிலும் நாள் கேள்விப்படும் செய்திகள் காணும் படங்கள் அனைத்தும் நம் இதயத்தை தொடும் வகையில் உள்ளன. உ.பி.,யை சேர்ந்த 109 வயதான ராம் துலையா என்ற பெண் தடுப்பூசி போட்டு கொண்டார். டில்லியை சேர்ந்த 107 வயது நிரம்பிய கேவல் கிருஷ்ணாவும், ஐதராபாத்தை சேர்ந்த 100 வயதான ஜெய் சவுத்ரியும் தடுப்பூசி போட்டு கொண்டதுடன், மற்றவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மற்றவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை குவித்திருக்கும் முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை பெற்றிருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை இவர்தான்.
கோவையில் பஸ் கண்டக்டராக இருக்கும் மாரிமுத்து யோகநாதன் என்பவர், பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். இதற்காக தனது வருமானத்தில் அதிகள பணத்தை செலவழித்து வருகிறார். அவரின் இந்த முயற்சிக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!