சொல்லிவைத்த மாதிரி ஒரே மாதிரி கருத்துக்கணிப்புகள்.. மநீம கொடுத்த தரமான பதிலடி

சொல்லிவைத்த மாதிரி ஒரே மாதிரி கருத்துக்கணிப்புகள்.. மநீம கொடுத்த தரமான பதிலடி

சென்னை: சொல்லி வைத்தார் போல் எல்லா கருத்துக்கணிப்புகளுமே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓரளவு மட்டுமே செல்வாக்கு பெறும் என்று கூறிவருகின்றன. இதை முற்றிலும் வெறுக்கும் மக்கள் நீதி மய்யத்தினர், பாருங்கள் நிச்சயம் பெரிய மாற்றத்தை எங்கள் இயக்கம் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் நவ் சி வோர்ட்டர் கருத்துக்கணிப்பு, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு, மாலை முரசு கருத்துக்கணிப்பு என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதுவரை வந்த பல்வறு கருத்துக்கணிப்புகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், மக்கள் நீதி மய்யம் பிடிக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

கணிப்புகள்

வாக்குகள்

இந்த கருத்துக்கணிப்பில் மக்கள் நீதி மய்யம் பெரிய அளவில் வாக்குகள் பெறாது என்றும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்க வாக்குகள் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. 4 முதல் 5 சதவீதம் அளவிற்கே வாக்குகளை பெறும் என்று கணிப்புகள் பல சொல்கின்றன.

கமல்ஹாசன்

கோவை தெற்கு

கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியிலும், சென்னையிலும் மற்றும் நகர்புறங்களிலும் புதிய வாக்காளர்கள் மற்றும் படித்தவர்களை அதிக அளவில் மக்கள் நீதி மய்யம் கவர வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. இந்த சூழலில் கோவை தெற்கு தொகுதியில் களம் காணும் கமல்ஹாசனுக்கு, பாஜகவின் வானதி சீனிவாசன் பலமான போட்டியாளராக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பெரும் தாக்கம் உறுதி

ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக வெறுக்கிறது மக்கள் நீதி மய்யம். தேமுதிக பாணியில் 10 சதவீதம் அளவிற்கு வாக்குகளை பிடிப்போம் என்று நம்புகிறார்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். சென்னை மற்றும் கோவையல பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்றும அவர்கள் கூறுகிறார்கள்.

நம்ப மாட்டோம்

அண்மையில் பேட்டி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஸ்ரீபிரியா(மயிலாப்பூர் வேட்பாளர்) கூறுகையில், நாங்கள் கருத்துக்கணிப்புகளை நம்ப மாட்டோம். இவை ஒரு தரப்புக்கு ஆதரவாகவே நடத்தப்படுகின்றன ஒரு சிலரிடம் கருத்துக்கேட்டு விட்டு நடத்துகிறார்கள். இதை எப்படி நம்புவது. கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்தவிடாதீர்கள். நான் உள்பட எங்களின் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும, நாங்கள் யாரிடமும் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவிலலை. எங்கள் பேச்சை கேளுங்கள்,, அப்புறம் நீங்களே முடிவு செய்யுங்கள் என்று தான் கூறிவருகிறோம்' என்றார். கமலுக்கு மக்கள் எந்த அளவிற்கு தருவார்கள் என்பது வரும் மே 2ம் தேதி தெரிந்துவிடும்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!