நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை! ஆன்லைனில் தேங்காய் சிரட்டை ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரம் என்றும் தள்ளுபடியில் 1,365 ரூபாய் என்ற அறிவிப்பு மக்களிடையே வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் தென் இந்தியர்களின் உணவுப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்று. நாம் பெரும்பாலான உணவுப் பொருட்களைத் தேங்காய் சேர்த்தே சமைத்து சாப்பிடுகிறோம். தேங்காயாக மட்டுமல்லாமல், இளநீராக பருகியும்,தேங்காயில் இருந்து எடுக்கும் பாலை உணவிலும் சேர்த்துக் கொள்கிறோம். நம்மூரில் சிறிய தேங்காய் பத்து ரூபாய் முதலே விலைக்குக் கிடைக்கிறது. இப்படியாக பயன்படுத்தப்பட்ட கொட்டாங்குச்சி என அழைக்கப்படும் தேங்காய் சிரட்டைகளை கிராமப் புறங்களில் அடுப்பு எரிக்க பயன்படுத்துவது வழக்கம். நகர்ப்புறங்களில் சிலர் இதனை காப்பிக் கோப்பைகள், அழகுப் பொருட்கள், சட்டைப் பட்டன்கள், பொம்மைகள் என கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் தீமை பற்றிய விழிப்புணர்வால், இவ்வாறு தயார் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனைத் தங்களுக்கு ச
Comments
Post a Comment