போக்குவரத்தை தொடங்க மருத்துவக்குழு பரிந்துரை: மாவட்டங்களில் அரசு பஸ்களை தயார்படுத்தும் பணி தீவிரம்

 

போக்குவரத்தை தொடங்க மருத்துவக்குழு பரிந்துரை: மாவட்டங்களில் அரசு பஸ்களை தயார்படுத்தும் பணி தீவிரம்

போக்குவரத்தை தொடங்க மருத்துவக்குழு பரிந்துரை: மாவட்டங்களில் அரசு பஸ்களை தயார்படுத்தும் பணி தீவிரம்

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுஊரடங்கு நிறைவடையும் நிலையில் பல்வேறு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் பஸ்களை இயக்க மருத்துவக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பொது போக்குவரத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக பஸ்களை தயார் செய்யும் பணிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பஸ்களை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் பேட்டரி, பிரேக், லைட் போன்றவை முழுமையாக சோதனையிடப்பட்டது. பின்னர் பஸ் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டது.
அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!