500 மில்லியன் டாலர்: அமெரிக்காவை தளமாகக் கொண்ட Epic நிறுவனத்தை வாங்கிய BYJU’s

  

500 மில்லியன் டாலர்: அமெரிக்காவை தளமாகக் கொண்ட Epic நிறுவனத்தை வாங்கிய BYJU’s

By  southend media  
July 24, 2021
அமெரிக்காவில் காலூன்ற முயலும் BYJU’S!

பெங்களூரை தளமாகக் கொண்ட எடெக் யூனிகார்ன் BYJU'S நிறுவனம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான Epic-கை 500 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது.

ஆரம்பித்து 12 வருடம் ஆகியுள்ள Epic நிறுவனம், குழந்தைகளுக்கான டிஜிட்டல் வாசிப்புத் தளமாகும். இந்த கையகப்படுத்தல் மூலம் BYJU-வை அமெரிக்கா வரை விரிவாக்கம் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு எபிக் மூலம் பயன்பாடு உதவ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் காலகட்டத்தால் பொது வாசிப்பு நூலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டதால் Epic, நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, BYJU’S இன் அதிகாரி அனிதா கிஷோர் இந்த கையகப்படுத்தல் தொடர்பாக  பேசுகையில்,

“நிறுவனம் இப்போது வரும் ஆண்டில் அமெரிக்க சந்தையில் இருந்து 300 மில்லியன் டாலர் வருவாய் ஈட்ட எதிர்பார்க்கிறது. வட அமெரிக்கா பகுதியில் நிறுவனத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முயன்று வருகிறோம்,” என்றார்.

Epic இணை நிறுவனர்களான சுரேன் மார்கோசியன் மற்றும் கெவின் டொனாஹூ ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடர்ந்து இருப்பார்கள். ஒவ்வொரு குழந்தையின் திறனையும் வாசிப்பதன் மூலம் திறக்க எபிக்கின் பணியைத் தொடர்ந்து அவர்கள் செய்வார்கள். 

BYJU'S

சில காலமாகவே, எபிக் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதன் நிறுவனர்களை சந்தித்து பேசியதுடன் தொடர்ந்து அந்த நிறுவனத்தை கண்காணித்து வந்தோம். எபிக் நிறுவன பயன்பாட்டில், வெவ்வேறு வயதினர் கற்றலில் கவனம் செலுத்தும் தயாரிப்புகள் உள்ளன, என்றுள்ளார்.

BYJU’S நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜு ரவீந்திரன், இது தொடர்பாக பேசுகையில்,

“எங்கள் கூட்டு உலகளாவிய ரீதியில் குழந்தைகளை ஈர்க்கக்கூடிய மற்றும் வாசிப்பு மற்றும் கற்றல் அனுபவங்களை உருவாக்க உதவும். ஆர்வத்தைத் தூண்டுவதும், மாணவர்கள் கற்றலைக் காதலிப்பதும் எங்கள் நோக்கம். Epic-கும் அதன் தயாரிப்புகளும் ஒரே பணியில் வேரூன்றியுள்ளன என்பதை அறிந்தோம். குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாக மாறுவதற்கு பயனுள்ள அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இது," என்று கூறியுள்ளார்.

இந்த எபிக் நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சுரேன் மார்கோசியன் மற்றும் கெவின் டொனாஹூ ஆகியோரால் நிறுவப்பட்டது. புத்தகத்திற்கும் குழந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதும், சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுவதும் தான் இந்த நிறுவனத்தின் நோக்கம்.

யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில், எபிக் நிறுவனத்தை தொடங்குவதற்கான யோசனை தனிப்பட்ட வலியிலிருந்து வந்தது என்று நிறுவனர்களில் ஒருவரான கெவின் கூறுகிறார்.

”பெற்றோராக இருப்பதால், இருவரும் தங்கள் குழந்தைகள் அதிகம் படிக்க வேண்டும் என்று விரும்பினோம். வாசிப்பு கற்றலுக்கு அடிப்படை என்பதால், குழந்தைகள் படிக்க முடிந்தால், அவர்கள் எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் உணர்ந்தோம். குழந்தைகளுக்கு டிஜிட்டல் வாசிப்பு தளத்தை உருவாக்கும் எந்த நிறுவனமும் அந்த நேரத்தில் இல்லை. குழந்தைகளுக்கு வீடியோவைப் பார்ப்பது அல்லது ஆன்லைனில் விளையாடுவது எளிதானது என்று சுரேன் சுட்டிக்காட்டினார்," என்று நிறுவனம் தொடங்கப்பட்டது குறித்து பேசுகிறார் கெவின்.

எபிக் 40,000க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 300 க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், எபிக் பயன்பாட்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட்டுள்ளன.

BYJU'S

யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில் சுரேன் பேசுகையில்,

“எங்கள் தளம் எந்தவொரு குழந்தைக்கும் அவர்களின் ஆர்வம் மற்றும் வயது அடிப்படையில் எந்த புத்தகத்தையும் கண்டுபிடிக்க உதவுகிறது. நாங்கள் தரமான உள்ளடக்கம் மற்றும் புத்தகங்களில் கவனம் செலுத்தியுள்ளோம், மேலும் அதை ஈர்க்கக்கூடியதாகவும், வேடிக்கையாகவும் ஆக்கியுள்ளோம்.

”குழந்தைகளை வாசிப்பதில் காதல் கொள்ள வேண்டும் என்பதே இதன் யோசனை. எபிக் தற்போது குழந்தைகளுக்கான மிகப்பெரிய டிஜிட்டல் வாசிப்புச் சேவைகளில் ஒன்றாகும், மேலும் இது அமெரிக்காவின் ஒவ்வொரு பள்ளியிலும் பயன்படுத்தப்படுகிறது," என்றவர், பைஜூ உடனான கூட்டணி குறித்து பேசுகிறார்.
epic

அதில், நாங்கள் அனிதா மற்றும் பைஜூ ஆகியோரைச் சந்தித்து, சாத்தியமான கூட்டணி குறித்து பேசினோம், கல்வியின் முக்கியத்துவத்தையும், உலகெங்கிலும் அதிகமான குழந்தைகளை அடைய தொழில்நுட்பம் எவ்வாறு உதவக்கூடும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் பேசும்போது, ​​நாங்கள் இன்னும் நிறைய செய்ய முடியும் என்று உணர்ந்தோம்.

”எபிக் நிறுவனம் அமெரிக்காவை தளமாகக் கொண்டாலும், உலகில் எங்கிருந்தும் குழந்தைகளை அடைவதன் மூலம் இது ஒரு சிக்கலை தீர்க்கிறது. வாசிப்பு மற்றும் கற்றல் மீதான வாழ்நாள் அன்பை வளர்ப்பதன் மூலம் எதிர்கால தலைமுறையினரை மேம்படுத்துவதற்கு நாங்கள் உதவ முடியும்," என்றுள்ளார் சுரேன்.

 இதற்கிடையே, கடந்த ஆண்டில் பல நிறுவனங்கள் எபிக்-கை வாங்க அணுகியபோது BYJU’s தான் சிறந்த பொருத்தம் என்று தற்போது அந்த நிறுவனத்திடம் விற்றுள்ளார் சுரேன்.

பைஜு மற்றும் அனிதா ஆகியோரின் பார்வை மற்றும் கலாச்சாரத்தின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம், மேலும் உலகளாவிய கண்ணோட்டத்தில் கற்றலைப் பாருங்கள். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதையும், தயாரிப்பு அடிப்படையில் இரு நிறுவனங்களும் எவ்வளவு சிறப்பானது என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

”BYJU’s அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் சர்வதேச பிராந்தியங்களில் உலகளாவிய கற்றல் பிராண்டை உருவாக்குவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்,” என்று விளக்குகிறார் சுரேன்.

ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப் | தமிழில்: மலையரசு

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!