குத்து சண்டையோடு சேர்த்து அரசியலும் பேசியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ – முழு விமர்சனம் இதோ.
குத்து சண்டையோடு சேர்த்து அரசியலும் பேசியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ – முழு விமர்சனம் இதோ.
கதைக்களம் :
1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. பிரிட்டிஷார் அறிமுகம் செய்த குத்து சண்டை விளையாட்டை ஒரே குழுவாக குத்துச் சண்டையில் ஈடுபட்டு வந்தவர்கள் பின்னர் சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்ப செட்டியார் பரம்பரை, கரிய பாபுபாய் பரம்பரை என்று பல்வேறு குழுக்களாக பிரிந்து விடுகிறது. ஆனால், இந்த குத்துச்சண்டையில் சார் பட்டா பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் சார் பட்டா பரம்பரைக்கு இடியப்ப நாயக்கர் பரம்பரைக்கும் மோதல் ஏற்பட்டு விடுகிறது. இடியப்ப நாயக்கர் பரம்பரையில் இருக்கும் ஒருவரை யாரும் வெல்ல முடியாமல் இருக்கிறது. இதனால் சார்பட்டா பரம்பரையின் மூத்த பயிற்சியாளர் பசுபதி, அவரை எதிர்க்க தன்னுடைய பாக்சிங் டீமில் இருந்து ஆட்களை தயார் செய்கிறார். மேலும், சார்ப்ட்டா பரம்பரையில் பசுபதியின் சீடனாக ஆர்யா வருகிறார்.
பின்னர் சார்பட்டா பரம்பரையின் கௌரவத்தை காப்பாற்றினரா என்பது தான் மீதிக்கதை. அதனை அதிக குத்து சண்டை, காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அணைத்து அம்சங்களையும் வைத்து நம்மை பழைய வட சென்னைக்கே கூட்டி செல்கிறது இந்த படம். இந்த படத்தில் ஆர்யா மட்டுமல்ல மற்ற நடிகர்கள் கூட ஒரு உண்மையான குத்து சண்டை வீரரை போல உடல் அமைப்பை பெற கஷ்டப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது.
பிளஸ் :
படத்திற்காக ஆர்யா எடுத்துள்ள முயற்சி மற்றும் பயிற்சி தான் படத்திற்கு முதல் பலமே.
பழைய வட சென்னையை ஆர்ட் டைரக்டர் மிகவும் தத்ருபமாக காண்பித்து உள்ளார்.
இந்த படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் படத்தின் கதாபாத்திர தேர்வு தான். ஆர்யாவை போல பசுபதி, ஜான் கொக்கன், ஜான் விஜய், பசுபதி என்று பலரும் காட்சிகளை கொள்ளையடித்துவிட்டனர்.
அதிலும் குறிப்பாக டான்சிங் ரோஸ் என்று இடியப்பன் பரம்பரையில் இருந்து ஆர்யாவுடன் மோதும் நடிகர் சபீரின் காட்சிகள் செம மாஸ்.
படத்தின் பாடல்கள் குறைவு என்பது ஒரு புறம் பலம் என்றாலும் BGMல் சந்தோஷ் நாராயணன் பிரித்து மேய்ந்துள்ளார்.
மைனஸ் :
பொதுவாக ரஞ்சித் பாடங்கள் ஜாதி ஆடையாளங்களில் சிக்கிவிடும், ஆனால், இந்த படத்தில் அது இல்லை என்றாலும் மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித் இது படத்திற்கு தேவை இல்லாத தலை வலியை கொடுக்கும்.
இரண்டாவது மைனஸ் என்றால் அது படத்தின் நீளம் தான். கிட்டத்தட்டா 2.53 மணி நேரம் ஓடுகிறது படம்.
இரண்டாம் பாதிக்கு பின் கொஞ்சம் தோய்வு ஏற்படுகிறது. பசுபதி கைதான பின்னர் ஆர்யா மீண்டும் சண்டைக்கு தயாராகும் காட்சிகளை குறைத்து இருக்கலாம்.
இரண்டாம் பாதியில் வரும் அரசியல், கள்ளச் சாராய பிசினஸ், பழிவாங்கும் படலம், குடிக்கு அடிமையாகும் காட்சிகள் என்று கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
இறுதி அலசல்:
ரஞ்சித் என்றால் ஜாதிப்படம் மட்டும் தான் எடுப்பார் என்ற விமர்சனத்தை இந்த படத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். வெறும் 70, 80 காலகட்டதை செட் மூலம் மட்டும் உணர்த்தாமல் இந்த படத்திர்காக அவர் செய்துள்ள ஆராய்ச்சிகளும் கன் கூடாக தெரிகிறது. பாலாவிற்கு பின் ஆர்யாவை சரியாக பயன்படுத்தியுள்ளார். மொத்ததில் சார்பட்டா பரம்பரை பாக்சிங் படம் என்றாலும் அனைவரையும் நாக் அவுட் செய்து இருக்கிறது. திரையரங்கில் வெளியாகி இருந்திருந்தால் இதை விட பாக்ஸ் ஆபீஸ் தான்
Comments
Post a Comment