லாக்டௌனில் அதிகரித்த போக்சோ வழக்குகள்; பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை முயற்சி!
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஊரடங்குக் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான சிறார் வதை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த லாக்டௌனில் இன்னும் கூடியிருப்பதையும் இது உணர்த்துகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த செல்வநாகரத்தினம், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளில் நடந்த குற்றங்களைக் கணக்கிட்டு அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தைகளுக்கு எதிராகக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதியப்பட்ட போக்சோ வழக்குகளை 4 பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்தோம்.
அதன்படி, 12 முதல் 18 வயதுப் பெண் குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தொடர்பாக 73 வழக்குகளும், முகம் தெரிந்த நபரால் குழந்தைகள் சிறார் வதைக்கு உள்ளானது குறித்து 32 வழக்குகளும், குழந்தைத் திருமணம் தொடர்பாக 50 வழக்குகளும், போர்னோகிராபி தொடர்பாக 50 வழக்குகளும் என்று மொத்தம் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Comments
Post a Comment