மதுரை: சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

 

மதுரை: சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

குற்றம்

Madurai-A-youth-was-arrested-in-Pokso-for-marrying-a-girl

மதுரையில் 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த 27 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த இளைஞர் மகாலிங்கம் (27). இவர், அப்பகுதியில் திருவிழாக்களுக்கு ரேடியோ செட் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்,

இதனை அறிந்த இளைஞரின் பெற்றோர் அவரது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்த நிலையில், சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது,

இந்நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய மகாலிங்கம், சிறுமிக்கு தாலிகட்டி தேவகோட்டை அருகே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தேவகோட்டை அருகே சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தை காவல் துறையினர் கைது செய்து மதுரை அழைத்து வந்து சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததோடு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதால் மகாலிங்கத்தை குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர், இதையடுத்து சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 25 அக உயர்வு: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு

என்னது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா ஒரு மருத்துவரா ..?? சொன்னா நம்பமாடிங்க ..!! நீகளே பாருங்கள் .!! புகைப்படங்கள் உள்ளே ..!!