சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

 


Share 
மதுரை : சிறுபான்மையினர் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பா.ஜ., மதுரை நகர் சிறுபான்மையினர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்த மத நல்லிணக்க கலந்துரையாடலில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசியதாவது: இந்தியா முழுவதும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பா.ஜ, வில் அதிகளவில் இணைகின்றனர். இதை பொறுக்கமுடியாத பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளும் தேச விரோத கட்சிகளும் தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்துகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
தி.மு.க., ஆட்சியில் இஸ்லாமிய மக்களிடத்தில் பா.ஜ., வை கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை.எங்களை போன்று அச்சுறுத்தலை சந்திக்கக்கூடியவர்கள் மதுரைக்கு வரும்போது முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாதது மட்டுமல்லாமல், இஸ்லாமியப் பகுதிகளில் நாங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என உறுதியாக கூற முடியும். தி.மு.க., ஆட்சியில் தான் அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுகிறார்கள். அவர்கள் இளைஞர்களை தவறான வழிகளில் ஊக்கப்படுத்துகின்றனர் ,என்றார்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 25 அக உயர்வு: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு

என்னது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா ஒரு மருத்துவரா ..?? சொன்னா நம்பமாடிங்க ..!! நீகளே பாருங்கள் .!! புகைப்படங்கள் உள்ளே ..!!