500 மில்லியன் டாலர்: அமெரிக்காவை தளமாகக் கொண்ட Epic நிறுவனத்தை வாங்கிய BYJU’s
500 மில்லியன் டாலர்: அமெரிக்காவை தளமாகக் கொண்ட Epic நிறுவனத்தை வாங்கிய BYJU’s By southend media July 24, 2021 அமெரிக்காவில் காலூன்ற முயலும் BYJU’S! பெங்களூரை தளமாகக் கொண்ட எடெக் யூனிகார்ன் BYJU'S நிறுவனம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான Epic -கை 500 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. ஆரம்பித்து 12 வருடம் ஆகியுள்ள Epic நிறுவனம், குழந்தைகளுக்கான டிஜிட்டல் வாசிப்புத் தளமாகும். இந்த கையகப்படுத்தல் மூலம் BYJU-வை அமெரிக்கா வரை விரிவாக்கம் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு எபிக் மூலம் பயன்பாடு உதவ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காலகட்டத்தால் பொது வாசிப்பு நூலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டதால் Epic , நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, BYJU’S இன் அதிகாரி அனிதா கிஷோர் இந்த கையகப்படுத்தல் தொடர்பாக பேசுகையில், “நிறுவனம் இப்போது வரும் ஆண்டில் அமெரிக்க சந்தையில் இருந்து 300 மில்லியன் டாலர் வருவாய் ஈட்ட எதிர்பார்க