Posts

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது

Image
  ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது அ+ தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை: தமிழக சட்டசபை யில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு  அதிமுக  உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட  அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

மதுரை: சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது

Image
  மதுரை: சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது குற்றம்     மதுரையில் 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த 27 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த இளைஞர் மகாலிங்கம் (27). இவர், அப்பகுதியில் திருவிழாக்களுக்கு ரேடியோ செட் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர், இதனை அறிந்த இளைஞரின் பெற்றோர் அவரது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்த நிலையில், சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது, இந்நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய மகாலிங்கம், சிறுமிக்கு தாலிகட்டி தேவகோட்டை அருகே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேவகோட்டை அருகே சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தை காவல் துறையினர் கைது செய்து மதுரை அழைத்து வந்து சிறுமியை

மதுரை புதிய ஆதீனம் இன்று பதவியேற்றார்

Image
  மதுரை புதிய ஆதீனம் இன்று பதவியேற்றார் பதிவு: ஆகஸ்ட் 23, 2021 01:10 IST புதிய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதீன மடத்தில் எளிமையாக நடந்த விழாவில் 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக் கொண்டார். மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் பீடாதிபதியாக கடந்த 46 ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த அருணகிரிநாதர் கடந்த 13-ந் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து மடத்தின் இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வசம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் அருணகிரிநாதர் இறந்து 10 நாட்களுக்கு பிறகு புதிய ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி இன்று (23-ந் தேதி) பதவியேற்றார். முன்னதாக மறைந்த அருணகிரிநாதருக்கு குரு பூஜை நடைபெற்றது. எளிமையாக நடந்த புதிய ஆதீனம் பதவி ஏற்பு விழாவில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதீனம் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பக்தர்கள் புதிய ஆதீனத

புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல்! - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

Image
  புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல்! - தலைமைக் காவலர் சஸ்பெண்ட் Southendmedia  விசாரணைக்குச் சென்ற முதியவர் மீது தாக்குதல் தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை, ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசி, அவரது கன்னத்திலும் அறைந்துள்ளார். அவருடன் வந்த உறவினர்கள், `சார் அவர் என்ன கொலை குத்தமா செஞ்சாரு? அவர் ஹார்ட் பேசண்ட் சார்’ என்று கூறுகின்றனர். அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(69) இவருக்கும் இவரது பெரியப்பா மகன் ஆறுமுகம் என்பவருக்குமிடையே நீண்ட நாட்களாக இடத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக, அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தான், அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகன் ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு அழைத்துள்ளார். ராதாகிருஷ்ணனும் அறந்தாங்கி காவல் நிலையம் வந்துவிட்டார். அவரின் உறவினர்கள் சிலரும் அவருடன் வந்தனர். இதையடுத்து தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, காவலர், ராதாகிருஷ்ணனின் விளக்கத்தைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. ராதாகிர

தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் ஆகிறது வேளாண் பட்ஜெட்!

Image
  Tamil News Today:  சட்டசபை 14-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..! 15 mins ago இன்று தாக்கல் ஆகிறது வேளாண் பட்ஜெட்! தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதலாவது பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டாக அது தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டசபையில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட்டைப் போலவே வேளாண்மைத் துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

Image
  மாற்றம் செய்த நாள்: ஆக 14,2021  07:57 Share  மதுரை : சிறுபான்மையினர் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார். பா.ஜ., மதுரை நகர் சிறுபான்மையினர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்த மத நல்லிணக்க கலந்துரையாடலில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசியதாவது: இந்தியா முழுவதும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பா.ஜ, வில் அதிகளவில் இணைகின்றனர். இதை பொறுக்கமுடியாத பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளும் தேச விரோத கட்சிகளும் தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்துகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் இஸ்லாமிய மக்களிடத்தில் பா.ஜ., வை கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை.எங்களை போன்று அச்சுறுத்தலை சந்திக்கக்கூடியவர்கள் மதுரைக்கு வரும்போது முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாதது மட்டுமல்லாமல், இஸ்லாமியப் பகுதிகளில் நாங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என உறுதியாக கூற முடியும். தி.ம

மத்திய அமைச்சர் முருகன் மக்கள் ஆசி யாத்திரை

Image
  மத்திய அமைச்சர் முருகன் மக்கள் ஆசி யாத்திரை மாற்றம் செய்த நாள்: ஆக 14,2021  07:55   Share  கோவை: கொங்கு மண்டலத்தில் மூன்று நாட்களுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன், 'மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொள்கிறார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது: பா.ஜ.,வை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கிலும், மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய செய்யும் வகையிலும், 'மக்கள் ஆசி யாத்திரை'யை கோவையில் ஆக., 16ல் துவக்குகிறார். நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் யாத்திரை நடக்கிறது. மூன்று நாள் யாத்திரை ஏற்பாடுகளை கோவை மாநகர் பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. கோவை நகருக்கு வருகை தரும் அமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.