மண்ணில்லா விவசாயமுறை மூலம் 8 கோடி விற்றுமுதல் ஈட்டும் சென்னை ’Future Farms'
மண்ணில்லா விவசாயமுறை மூலம் 8 கோடி விற்றுமுதல் ஈட்டும் சென்னை ’Future Farms' By YS TEAM TAMIL| Hydrophonics எனும் மண்ணில்லாமல் செடி மற்றும் தாவரங்கள் வளரும் விவசாயமுறை செய்யும் நிறுவனம் தொடங்கிய ஸ்ரீராம் கோபால் இன்று அதை நாடெங்கும் விரிவாக்கம் செய்து வருகிறார். 1.1K CLAPS +0 +0 சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார் ஸ்ரீராம் கோபால். 5 வருடங்களுக்கு முன் அவரின் நண்பர் யூட்யூபில் காண்பித்த வீடியோ அவரின் வாழ்க்கையையே இன்று மாற்றி அமைத்துள்ளது. Hydrophonics எனும் மண்ணில்லாமல் செடி மற்றும் தாவரங்கள் வளரும் முறையை பற்றிய யூட்யூப் வீடியோ தான் அது. அதைப் பார்த்த ஸ்ரீராம் அந்த விவசாய முறையால் ஈர்க்கப்பட்டு அதை ஒரு தொழிலாக செய்ய முடிவெடுத்தார். ஹைட்ரோபோனிக்ஸ் துறையின் உலக சந்தை மதிப்பு சுமார் $6934 மில்லியனாக உள்ளது. வரும் 2025க்குள் இது $12106 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன Read more Hydrophonics முறை என்றால் என்ன? காய்கறிகள், செடிகள் மற்றும் தாவரங்களை சமமான நிலம் அல்லது வீடுகளிலேயே வெறும் தண்ணீர் மட்டும் கொண்டு மண் இல்லாமல் வளர்க்கக்கூடி